×

அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

வாழப்பாடி, ஜூன் 4: அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மேற்கொண்ட அதிரடி சோதனையில், செயற்பொறியாளரிடம் இருந்த கணக்கில் வராத ₹50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தன.

இந்நிலையில் நேற்று மதியம், அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஏடிஎஸ்பி சந்திரமவுலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு,  பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி உள்ளிட்ட 5 ஒன்றியங்களுக்கு, உதவி  செயற்பொறியாளராக பணிபுரிந்து வரும் தென்பாண்டி தமிழ் என்பவரிடம், கணக்கில்  வராத பணம் ₹50 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்த போது, அவர் சரிவர பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உதவி செயற்பொறியாளர் தென்பாண்டி தமிழிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags : Ayodhyapattinam Regional Development Office ,
× RELATED அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி...